விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’.

இப்படத்தின் இயக்குனர் ஆனந்தன், இயக்குனர் எழிலிடம் உதவிய இயக்குனராகப் பணியாற்றியவர். 

படம் பற்றி ஆனந்தன் கூறுகையில்,

“விஷாலிடம் கதையைக் கூறியதும் மிகவும் பிடித்துவிட, படத்தை நானே தயாரித்து நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

கதாபாத்திரங்கள் எதையும் மாற்ற வேண்டாம், அப்படியே  இருக்கட்டும் என்றார். பெண் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்று குழப்பமாக இருந்தது. அதற்கு வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம்.  ரெஜினா கஸன்ட்ரா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்,” என்கிறார்.

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத்தொகுப்பை சமீர் முகமதுவும் பார்த்துக் கொள்கிறார்கள். கலையை எஸ்.கண்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது.

மற்ற பணிகளை விரைவாக முடித்து திட்டமிட்டபடி மே 1-ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளார்கள்.

Read Previous

மீண்டும் அருண் விஜய், அறிவழகன் கூட்டணி

Read Next

காலேஜ் குமார் – விமர்சனம்

Most Popular