இந்த வருடத்தின் மிகப் பெரிய நிகழ்வு என எல்லோராலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது. இனிய ஆரம்பம், இனிய இசை ஆரம்பம் என பார்த்தவரும் , கேட்டவரும் பரவசப்பட்ட நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்தது.
இப்படத்தை வெற்றிப் படமாக்க படக்குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர். NEP என்று பரவலாக எல்லோராலும் அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் திரை வெள்ளோட்டத்தையும், இசை வெளியீட்டையும் ஏகோபித்த முறையில் பாராட்டி வருகின்றனர்.
You Tube மூலமாக இப்படத்தின் வெள்ளோட்டத்தை இரண்டு நாட்களில் ஏழு லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். Sony India நிறுவனத்தினர் இத்தகவலை ஊடகங்களில் பெருமிதத்தோடு தெரிவிக்கும் வேளையில் , இந்த படத்தின் வெள்ளோட்டம் விரைவில் திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டு ரசிகர்களைக் கவரும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
இப்படத்தின் நாயகன் ஜீவாவின் தோற்றம் ரசிகர்களை, குறிப்பாக இளம் பெண் ரசிகர்களை அதிகம் கவரும் என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மெனன் நம்பிக்கையுடன் கூறுகிறார்.