லவ் பண்லாமா…வேணாமா ! – சிம்பு

     நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் வழங்கி, ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில்,  STR  நடிக்கும் போடா போடி திரைப்படம் இறுதிக் கட்ட பணியில் உள்ளது.

     இப்படத்தில் இடம் பெறும் ‘லவ் பண்லாமா, வேணாமா…’, என்ற பாடல் மட்டும் இன்று (செப்- 6) வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது.

     படத்தின் பெரும் பகுதி லண்டனிலும், பாடல்கள் ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட், மக்காவு, மும்பை மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.

      நாயகியாக நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, அறிமுகமாக உள்ளார். விடிவி கணேஷ், ஷோபனா, மாஸ்டர் சமரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

     ஒளிப்பதிவை ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய டங்கன் ஹெல்ஃபோர்ட் என்பவர் செய்துள்ளார். இசை – தரண்குமார், படத்தொகுப்பு – ஆண்டனி, கலை – கிரண், பாடல்கள் – வாலி, STR, நா.முத்துக்குமார் எழுதியுள்ளனர். நடனம் – கல்யாண், ப்ரேம், ரக்ஷித், ராபர்ட், நிர்வாக தயாரிப்பு – அக்கினேனி ஸ்ரீராமுலு.

  போடா போடி படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் இளைஞர் என்பதால் படத்தை இளைஞர்களை கவரும் விதமாகவும், அதே சமயம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாகவும் எழுதி இயக்கியுள்ளார்.

Read Previous

நீதானே என் பொன்வசந்தம் – இசை சாதனை

Read Next

இன்றைய ரிலீஸ்