முக்தா சீனிவாசன் வழங்க, மாயா கிரியேஷன்ஸ் சார்பாக, என்.ஆர்.சீனிவாசன் தயாரிக்கும் படம் ‘10000 கோடி’. சீனிவாசன் சுந்தர் இயக்கும் இந்த படத்துக்கு இசை மனோஜ். புதுமுகங்கள் துருவ், மடால்ஷா, நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பூனாவில் உள்ள மகாபலீஸ்வர் என்ற இயற்கை மலைப் பிரதேசத்தில் , ‘இது என்ன மாயமோ…இது என்ன மாற்றமோ…’ என்ற பாடல் காட்சி, துருவ், மடால்ஷா பங்கேற்க படமாக்கப்பட்டது.
இந்த காதல் ஜோடியை தொடர்ந்து கண்காணித்து வரும், சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி விவேக், மற்றும் அவரது குழுவினர் அந்த இளம் காதல் ஜோடிகளின் காதல் ஆட்டத்தைப் பார்த்தவாறே மெய் மறந்து போய் விட , அந்த காதல் ஜோடிகள் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு பெரும் செல்வத்துடன் ஓடிப் போய் விடுவதாக படமாக்கப்பட்டது.
10000 கோடி முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.