இன்று செப்டம்பர் 14ம் தேதியன்று வெளிவர உள்ள படங்களைப் பற்றிய சிறு விவரம்.
சுந்தரபாண்டியன்
கம்பெனி புரொடக்ஷன்ஸ் – இயக்குனர் எம்.சசிகுமார் தயாரிப்பில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் படம். இசை – என்.ஆர்.ரகுநந்தன். சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். டைட்டில் பிரச்சனையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து இன்று வெளியாகிறது.
நெல்லை சந்திப்பு
டி கிரியேஷன்ஸ் திருமலை வழங்க, யங் சினி ட்ரீம்ஸ் தயாரிப்பில் நவீன். கே.பி.பி இயக்கியிருக்கும் படம். இசை – யுகேந்திரன் வாசுதேவன். ரோகித், பூஷன், மேகா நாயர், தேவிகா , ‘சங்கர் குரு’ ராஜா, பி.எல்.தேனப்பன், இயக்குனர் சரவண சுப்பையா, மீரா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன், மயில் சாமி, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
துள்ளி எழுந்தது காதல்
சென்னை பிலிம் ஸ்கூல், சில்வர் ஸ்டிரீக் தயாரிப்பில் ஸ்ரீஹரிநானு இயக்கியிருக்கும் படம். இசை – போபோ சசி. ராஜா, ஹரிப்ரியா, பூமிகா, சிறப்புத் தோற்றத்தில் அனுஷ்கா மற்றும் 40 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்துள்ள படம் இது.