திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் சீமான்.
இவரது இயக்கத்தில் விஜய் நடிக்க ‘பகலவன்’ என்ற திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.பின்னர், அது நடக்காமலே போனது. ஆனால் அந்த கால்ஷீட்டில்தான் விஜய் நடிக்க ‘துப்பாக்கி’ படத்தை தயாரித்தார் தாணு.
தற்போது மீண்டும் ‘பகலவன்’ படத்தை சீமான் இயக்கத்தில் தயாரிக்க இருப்பதாக எஸ்.தாணு அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ‘தேன் கூடு’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில்தான் இதை அனைவர் மத்தியிலும் அறிவித்தார். நாயகன், நாயகி மற்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
‘பகலவன்’ படத்தை சீமான் இயக்கத்தில் தயாரிக்க உள்ளேன் என்று மட்டும் அறிவித்தார். இனி, விரைவில் முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.