8 நாடுகளில் ‘ஐ’

  ங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘ஐ’. இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சீனாவில் நடந்தது.

இனி, மேலும் 7 நாடுகளில் நடக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மட்டுமே 8 இடங்களில் படப்பிடிப்பை 45 நாட்கள் நடத்தலாம் என சென்றிருந்தனர். ஆனால் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, தற்போது படப்பிடிப்பை வேறு நாடுகளில், அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Read Previous

‘மாட்டாத’ சூர்யா

Read Next

வருகிறார் ‘வடிவேலு’