‘துப்பாக்கி’ 9ம் தேதி ரிலீஸ்…

     ஏ.ஆர். முருகதாஸ்  , விஜய் முதன் முறையாக இணைந்திருக்கும் ‘துப்பாக்கி’ படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய்யை ஒரு ஸ்டைலான ஆக்ஷன் ஹீரோவாக காட்டி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறார்.

தீபாவளிக்கு சற்று முன்னதாக அதாவது இம்மாதம் 9ம் தேதியே ‘துப்பாக்கி’ வெளியாக இருக்கிறது. ஆகவே விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் சில நாட்கள் முன்னதாகவே ஆரம்பமாகி விடும்.

இயக்குனர் முருகதாஸும் இது ஒரு விஜய் படம் தான் என முன் கூட்டியே தெரிவித்திருப்பது எதிர்பார்ப்பில் இருக்கும் அவருடைய ரசிகர்களுக்கு திருப்தியாகவே அமைந்து விடும்.

துப்பாக்கி படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Read Previous

‘பவர் ஸ்டார்’, சாம் ஆன்டர்சன்..அடுத்து யாரோ ?

Read Next

‘ஆரா 3டி’ யில் விஸ்வரூபம் டிரைலர்