தமிழ்த் திரையுலகில் தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளவர் அமலா பால் தான். விஜய்க்கு ஜோடியாக நடிக்க பலரும் போட்டி போட்டு வரும் நிலையில் அந்த வாய்ப்பு அமலா பாலுக்கு கிடைத்ததே இந்த ஆச்சரியத்துக்குக் காரணம்.
அமலா பால்-ன் ’இயக்குனர் நண்பர்’ விஜய் தான் விஜய் நடிக்கப் போகும் படத்தின் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் அடுத்த படமாக வரப்போவதால் இந்த படத்திற்கு தானாகவே ஒரு முக்கியத்துவம் கிடைத்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு படத்தில் நாயகியாக நடிக்கப் போகிறார் அமலா பால்.
ஏற்கெனவே, ஜெயம் ரவி ஜோடியாக ‘நிமிர்ந்து நில்’ படத்திலும், இதே படத்தின் தெலுங்குப் பதிப்பில் நானி ஜோடியாகவும், மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘இத்தராமயிலதோ’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ, 2013ம் ஆண்டின் முன்னணி ஹீரோயின்கள் வரிசையில் அமலா பாலும் இடம் பெற்று விடுவார் ?