கரு. பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’

     ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ‘பார்த்திபன் கனவு’, சேரன், சினேகா நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’, ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த ‘சதுரங்கம்’, போன்ற படங்களை இயக்கியும் ‘மந்திரப் புன்னகை’ படத்தை இயக்கி, நடித்தவருமான கரு. பழனியப்பன் அடுத்து இயக்கப் போகும் படம் ‘ ஜன்னல் ஓரம்’.

விமல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பார்த்திபன், விதார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மனிஷா ஹீரோயினாக நடிக்க பூர்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹேமந்த் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கம்பம், குமுளி, வாகமன் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

 

Read Previous

உதயநிதி ஜோடியாக நயன்தாரா

Read Next

டிசம்பரில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’