இன்றைய ரிலீஸ்…

     
ன்று நவம்பர் 30ம் தேதியன்று வெளியாகும் படங்கள் பற்றிய ஒரு சிறு விவரம்.

நீர்ப்பறவை

ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம். இசை – என்.ஆர். ரகுநந்தன். விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘தென் மேற்கு பருவக்காற்று’ படத்திற்குப் பிறகு  சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் வழங்க லியோ விஷன் தயாரித்திருக்கும் படம். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வேத் சங்கர் இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பீட்சா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளிவரும் படம். வித்தியாசமான கதையமைப்பு ரசிகர்களை நிச்சயம் ரசிக்க வைக்கலாம்.

விஜய் சேதுபதியை ‘தென் மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களிருவரின் படங்களுமே இன்றைய ரிலீஸ் போட்டியில்  உள்ளது .

 

Read Previous

நீர்ப்பறவை – விமர்சனம்

Read Next

புதிய முயற்சியில் ‘நீதானே என் பொன்வசந்தம்’