தொடர்ந்து ஹீரோயின்கள் பற்றிய செய்தியாகவே வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஹீரோயின் செய்தி ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கானது.
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கி வரும் படம் ‘ இவன் வேற மாதிரி’. ‘கும்கி’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடிக்க புதுமுகம் சுரபி ஒப்பந்தமாகியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த இவர் ஒரு மாடல். தமிழ்ப் படத்தில் நடிப்பதில் மிகவும் ஆவலுடன் இருக்கிறார் இந்த டெல்லி அழகி.
இப்படத்தின் ஹீரோயினாக மேனால் கஜ்ஜார் நடிக்க இருந்ததாக ஏற்கெனவே ஒரு தகவல் வந்தது. இப்போது சுரபி ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.