தமிழில் ஒரே சமயத்தில் தனுஷ், சிம்பு இவர்களின் ஜோடியாக முறையே ‘மயக்கம் என்ன’, ‘ஒஸ்தி’ படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாயா. இரு படங்களின் தோல்வி இவரை கோடம்பாக்கத்தை விட்டு செல்ல வைத்து விட்டது.
அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்திலும் நடிப்பதாக இருநதார். ஆனால் அதில் இருந்தும் விலகி விட்டார்.
தற்போது, தெலுங்கில் ரவி தேஜா ஜோடியாக ‘சரோச்சாரு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், நாகார்ஜுனா ஜோடியாக ‘பாய்’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ‘ரிச்’சான மாடர்ன் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் ரிச்சா.
வரும் 2013ம் ஆண்டு தனக்கு சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறார் ரிச்சா.
அங்க ஜெயிச்சிட்டு வாங்க, இங்க உடனே கூப்பிடுவாங்க…