ஜெய பாலாஜி ரியல் மீடியா தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம். விஷால், த்ரிஷா, சுனைனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திற்குப் பிறகு விஷால் – இயக்குனர் திரு இணைந்துள்ள அடுத்த படம் இது.
விஷாலுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் த்ரிஷா.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெறுகிறது.
இம்மாதத்தில் யுவன் இசையமைப்பில் இசை வெளியீடு நடக்கும் இரண்டாவது படம் இது.