அஜித்துடன் நடிக்க காத்திருக்கிறேன் – தமன்னா

     விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில்தான் அஜித் அடுத்து நடிக்கப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படத்தின் மூலம் அஜித்துடன் முதன் முறையாக ஜோடி சேர்கிறார் தமன்னா.

‘அஜித்துடன் இணைந்து நடிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் தமன்னா.

இப்படத்திற்கான பாடல் பதிவு தேவிஸ்ரீபிரசாத் இசையில் ஆரம்பமாகிவிட்டது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

தமிழில், கடைசியாக தமன்னா நடித்து வெளிவந்த படம்  ‘வேங்கை’. சென்ற வருடம் ஜுன் மாதம் வெளிவந்தது. ஏறக்குறைய, இவர் தமிழில் நடித்து  ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டது.

அஜித்துடன் நடிக்கும் படம் மூலம் அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகி விடுவார்.

Read Previous

தன்னை மாற்றிக் கொண்ட நயன்தாரா

Read Next

இவர்தான் கார்த்திக் மகன் ‘கௌதம்’