‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் இயக்குனர் சுராஜ்.
“அனுஷ்கா தவிர, நிகிதா, சனுஷா மற்ற ஹீரோயின்கள். ஆனால், அனுஷ்கா தான் கார்த்திக்கு ஜோடி. மற்ற இருவரும் படத்திற்கு கூடுதல் அட்ராக்ஷன், என் படங்களுக்கு ரசிகர்கள் வந்தா ஜாலியா ரசிச்சிட்டு போனோம், அதான் எனக்கும் வேணும்,” என்கிறார் இயக்குனர் சுராஜ்.
நிகிதா சரத்குமார் ஜோயாக ‘சத்ரபதி’ படத்தில் நடித்தவர். சமீபத்தில் ‘முரண்’ படத்தில் சேரன் ஜோடியாக நடித்திருந்தார். ‘சரோஜா’ திரைப்படத்தில் ‘கோடான கோடி….’ பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போட்டவர்.
சனுஷா, ‘ரேணிகுண்டா’ திரைப்படத்தில் அறிமுகமானவர், விமல் ஜோடியாக ‘எத்தன்’ படத்திலும் நடித்தவர்.