‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில், அவருடன் ஜோடியாக நடிக்கப் போவதைப் பற்றி மனம் திறந்திருக்கிறார் தமன்னா.
“தமிழ்ப் படங்களில் நடிக்காமல் போனது மிகவும் வருத்தம்தான், தெலுங்கு, இந்தியில் மிகவும் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. இப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறேன். அதுவும் அஜித்துடன் ஜோடியாக நடிக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
தமன்னா, கடைசியாக தமிழில் நடித்த படம் தனுஷ் ஜோடியாக நடித்த ‘வேங்கை’ , 2011 ஜுலை 7ல் வெளியானது.
வாங்க தமன்னா வாங்க..‘புள்ளி மானாட்டம் வாங்க’…