அஜித் நடித்த பில்லா – 2 படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பார்வதி ஓமனகுட்டன். முதல் படமே அவரை ஏமாற்றி விட்டதால், அடுத்து அவரை படங்களில் நடிக்க வைப்பதற்கு யாருமே முன் வரவில்லை.
இப்போது, ‘நதிகள் நனைவதில்லை’ என்ற படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார். முரளி, லைலா நடித்த ‘காமராசு’, மற்றும் ‘அய்யா வழி’ படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி. அன்பழகன் இந்த படத்தை இயக்கப் போகிறார்.
ப்ரணவ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, மதுரை முத்து, டி.பி. கஜேந்திரன், பானுப்ரியா பாலா சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சௌந்தர்யன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது-