அடுத்த வாரம் ‘ரிலீஸ் வாரம்….’

      ந்த ஆண்டின் கடைசி வெள்ளிக் கிழமையான 28 டிசம்பர் , 2012 அன்று பல திரைப்படங்கள் வெளி வர தயாராக உள்ளன. தமிழக அரசு வழங்கும் மான்யமே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் வெளியாகும் சிறு முதலீட்டுப் படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்திற்குள், அதாவது இந்த 2012 முடிவதற்குள் வெளிவரும் படங்களுக்கு,  அடுத்த ஆண்டு இந்த உதவித் தொகையை பெற்று விடலாம்.

டிசம்பர் 28ல் வெளிவர இருக்கும் படங்களில் நட்சத்திர அந்தஸ்து உள்ள படம் விஷால், த்ரிஷா நடிக்கும் ‘சமர்’ மட்டுமே. மற்றவை சிறு முதலீட்டுப் படங்களாகத்தான் உள்ளது.

மற்ற படங்களின் பட்டியல் இதோ, புதுமுகங்கள் தேவை, பத்தாயிரம் கோடி, பாரசீக மன்னன், அகிலன், குறும்புக்காரப் பசங்க, லொள்ளு தாதா பராக் பராக், நண்பர்கள் கவனத்திற்கு, கோழி கூவுது.

அடுத்த வாரம் திரையுலக வெளியீட்டிற்கு அமோகமான வாரம்தான்…

Read Previous

ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

Read Next

அடுத்த படத்தில் பில்லா – 2 நாயகி…

Most Popular