மீண்டும் ‘ஆஸ்கர்’ வாங்க ஆசை இல்லை- ஏ.ஆர். ரகுமான்

     ஜெயா டிவிக்காக ஏ.ஆர். ரகுமான் நடத்த இருக்கும் ‘தாய் மண்ணே வணக்கம்’ இசை நிகழ்ச்சிக்ககாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

அதில், ஏ.ஆர். ரகுமான்  கலந்து கொண்டு  இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி பற்றிய விவரங்களை சுருக்கமாக தெரிவித்தார்.

மேற் கொண்டு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், “மீண்டும் ஆஸ்கர் விருது பெறும் ஆசை எனக்கு இல்லை, ஏற்கெனவே வீட்டில் இரண்டு வைத்திருக்கிறேன். அது போதும்..

ஹிந்திக்குச் சென்றால் தமிழ்ப் படங்களை விட்டு வர மாட்டீர்களா என கேட்கிறார்கள், இங்கு வந்தால் ஹிந்திப் படங்களுக்கே இசையமைக்கிறீர்கள் என கேட்கிறீர்கள்.

தற்போது தமிழில், கடல், பரத் பாலா படம், கோச்சடையான், ஐ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்,” என்றார்.

Read Previous

ஜெயா டிவியின் ‘தாய் மண்ணே வணக்கம்’ – ஏஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி

Read Next

த்ரிஷா நடிக்கும் ‘ரம்’