‘ஜெயம்’ ரவிக்கு அவருடைய பெயருக்கு முன் அடைமொழியைக் கொடுத்த படம் ‘ஜெயம்’. இந்த படத்தின் இயக்குனரான ராஜாவும் ‘ஜெயம்’ ராஜா என்றே அழைக்கப்படுகிறார்.
ஆனால், அந்த படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த்திற்கு அந்த படம் தமிழில் தொடர்ந்து ஜெயத்தைக் கொடுக்கவில்லை. தெலுங்கில் ஜெயத்தைக் கொடுத்து, அங்கு அவரும் ஒரு முன்னணி நாயகனாக உயர்ந்தார்.
அவர் நாயகனாக நடித்த, ‘லட்சியம்’, ‘அந்துருடு’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
கோபிசந்த்துக்கும், பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் உறவினரான ரேஷ்மாவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.