நீ……ண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் ‘பூ’ பார்வதி

பூ – சென்னையில் ஒரு நாள்

தமிழில் முதல் படமே அமர்க்களமாக அமைந்தாலும் அதன் பின் சிலரை திரைப்படங்களில் பார்ப்பது அரிதாகி விடும். அந்த வரிசையில் இருந்தவர்தான் ‘பூ’ பார்வதி.

சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த்  நாயகனாக நடித்து 2008, அக்டோபர் 28ம் தேதியன்று வெளிவந்த ‘பூ’ படம்தான் பார்வதி அறிமுகமான படம். அச்சு அசலான கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அதன் பின் ஏனோ தமிழ் சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டார்.

இப்போது, ஒரே சமயத்தில் நீ…..ண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘டிராபிக்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘சென்னையில் ஒரு  நாள்’ படத்திலும், பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ‘மறியான்’ படத்திலும் நடித்து வருகிறார்.

“பூ படத்தில் நடித்ததற்குப் பிறகு, என்னைப் பலரும் பாராட்டினர். அதன் பின் 15 படங்களுக்கும் மேல் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். வழக்கமான படங்களில் நடிப்பதற்கு ஆசையில்லை. அதான் இவ்வளவு நீண்ட இடைவெளி என்கிறார்,”  இந்த பூ மகள்.

அப்ப, ‘சென்னையில் ஒரு நாள், மறியான்’ இரண்டு படமுமே வித்தியாசமான படமாத்தான் இருக்கும்…..

 

Read Previous

பிப்ரவரி 1ல் ‘கடல்’

Read Next

அஜித்துடன் சண்டை போட்ட ஆர்யா