விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அஜித்துடன் ஆர்யா சண்டை போட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த படத்துடன் ஆர்யா , சேட்டை படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஆர்யா, தற்போது மேற் சொன்ன இரண்டு படங்களைத் தவிர , இரண்டாம் உலகம், ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 2013ல் ஆர்யாவுக்கு, தொடர்ந்து நல்ல படங்களாகவே வரிசை கட்டி நிற்கின்றன.