‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்குப் பிறகு ராஜேஷ் இயக்கவிருக்கும் படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.
கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் காஜல் அகர்வால். இதற்கு முன் இருவரும் இணைந்து ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்திருந்தனர்.
‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு காஜல் அகர்வாலுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே, கார்த்தியும், காஜலும் ‘நான் மகான் அல்ல’ படத்தில் பொருத்தமான ஜோடியாக இருந்தனர்.
எனவே, மீண்டும் இவர்களை ஜோடி சேர வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.