ஊர்ப்பக்கம் இருந்து சென்னைக்கு பொழைக்கிறதுக்காக கிளம்பி வந்தவங்களப் பார்த்து ‘மஞ்சப்பை’ய தூக்கிட்டு வந்துட்டியான்னு கிண்டலா சொல்றது இப்பவும் சென்னை பக்கம் இருக்கு.
இதையே தான் தயாரிக்கிற முதல் படத்தோட டைட்டிலா வச்சிட்டாரு இயக்குனர் சற்குணம்.
‘களவாணி’, தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய சற்குணம் ‘ஏ சற்குணம் சினிமாஸ்’னு ஆரம்பிச்சிருக்கிற தயாரிப்பு நிறுவனத்தோட முதல் படம்தான் ‘மஞ்சப்பை’.
சற்குணத்தின் உதவியாளர் ராகவன் இயக்கற இந்த படத்துல விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன், மற்றும் பல முன்னணி நடிக, நடிகையர் நடிக்க இருக்காங்க.
ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறாரு.
படப்பிடிப்பு பிப்ரவரி மாசம் துவங்கி, சென்னை, பொள்ளாச்சில நடக்க இருக்கு .
படத்தோட கதைய கேட்டவுடனேயே திருப்பதி பிரதர்ஸ், லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் படத்தை உடனே வாங்கிட்டாங்களாம்.
சற்குணத்துக்கும் முதல் தயாரிப்பு படப்பிடிப்பு போறதுக்கு முன்னாடியே ‘மஞ்சப்பை’ நிரம்பிடுச்சி.
ம்…டைட்டில் ராசியோ என்னமோ….