பொங்கல், தீபாவளி, என்றாலே தமிழ் சினிமாவில் பத்து, பதினைந்து படங்கள் வெளிவந்த காலம் போயே விட்டது.
சினிமாவை நேசித்தவர்கள் இருந்த இடத்தில் இன்று சினிமா வியாபாரிகளே இருக்கிறார்கள். அதனால், தமிழ் சினிமாவின் நிலையும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக கீழிறிங்கி கொண்டு வருகிறது.
இன்றைய நாளிதழ்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். ஆம்.
சென்னையில் இரண்டு தெலுங்கு படங்கள் மொத்தமாக 36 திரையரங்குகளில் வெளியாகின்றன.
ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், அமலா பால் நடித்த ‘நாயக்’ தெலுங்கு திரைப்படம் 24 திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபு, வெங்கடேஷ், சமந்தா, அஞ்சலி நடித்துள்ள ‘ சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி சேத்து’ தெலுங்கு திரைப்படம் 12 திரையரங்குகளில் 11ம் தேதிய வெளியாகிறது.
ஏற்கெனவே, ஆங்கிலம், மற்றும் இந்தித் திரையப்படங்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்போது தெலுங்கு திரைப்படங்களும் ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன.
விரைவில், தமிழ்ப் படங்களுக்கே கூட திரையரங்குகள் கிடைக்காத சூழல் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.