ரஜினி, கமல் மட்டும்தான் 500, 600 தியேட்டர்களுக்கு மேல் அவர்களுடைய படங்களை ரிலீஸ் செய்வார்களா, இதோ நானும் வருகிறேன் என போட்டியில் குதித்துள்ளார் ‘திருமதி தமிழ்’ ராஜகுமாரன்.
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் படங்களை இயக்கிய ராஜகுமாரன், தற்போது இயக்கி நாயகனாகவும் நடித்து வரும் படம் திருமதி தமிழ். இந்த படத்தில் தேவயானி, கீர்த்தி சாவ்லா, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சென்ற மாதம் இசை வெளியீடு நடத்தி, படத்தின் ஸ்டில்களையும் பத்திரிகை, இணையதளங்களுக்கு அனுப்பி அதன் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் ராஜகுமாரன்.
இப்போது படத்தின் வெளியீடு தொடர்பான செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
”திருமதி தமிழ் படத்தை எங்களது ராதே பிலிம்ஸ் நிறுவனமே விரைவில் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடுகிறது. படம் நிச்சயமாக வெற்றி பெறும் ” என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அசாத்திய நம்பிகைக்கு எங்கள் வாழ்த்துக்கள் ஸார்…