‘தலைவா’ படத்தில் இப்போது மூன்றாவதாக ஒரு விஜய் இணைந்துள்ள செய்தி கிடைத்துள்ளது.
இப்படத்தை இயக்கி வருபவர் இயக்குனர் விஜய், ஹீரோவாக நடிப்பவர் விஜய், வில்லனாக நடித்து வருபவர் பின்னணி பாடகர் விஜய். ஆமாம், பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
ஏற்கெனவே, இந்த படத்தில் விஜய் யேசுதாஸ் வில்லனாக நடித்து வருகிறார் என்ற செய்தி வெளியானது. பின்னர், அந்த செய்தியை மறுத்தார்கள்.
இப்போது விஜய் யேசுதாஸ் வில்லனாக நடிக்கும் செய்தி உறுதியாகியுள்ளது. இதற்காக கடுமையாக உடற்பயிற்சியெல்லாம் செய்து உடம்பை ஏற்றியிருக்கிறாராம் விஜய்.
ஒரு இளமையான வில்லன் வந்தாச்சி…