CSK – ன்னு சொன்ன உடனே, ஏதோ ஐபிஎல் மேட்ச் பத்தி பேசறோம்னு நினைச்சிக்காதீங்க…இது படத்தோட டைட்டில், ‘சார்லஸ்-ஷாபிக்-கார்த்திகா’ .
படத்தோட டைட்டிலை மட்டும் வித்தியாசமா வைக்கலை, படத்தையே நிஜமாவே வித்தியாசமாக எடுத்துட்டு வர்றன்னு சொல்றாரு இயக்குனர் சத்யாமூர்த்தி . ச.
பிரகாஷ்ராஜ், கே.வி. குகன் இவங்கி கிட்ட வேலை பார்த்தவர்தான் இந்த சத்யாமூர்த்தி . ச.
கே.வி. குகன் இயக்கிய ‘இனிது இனிது ’ படத்துல நடிச்ச ஷரன்குமார், நாராயண், விமல், புதுமுகம் மிஷால், இவங்களோட ‘ஆரோகணம்’ படத்துல நடிச்ச ஜெய் குஹேனி ஹீரோயினா நடிக்கிறாங்க.
படத்தோட ஒரு முக்கிய காட்சியில 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணி தொட்டியில ஜெய் குஹேனி கைகளை கட்டி , அந்த தண்ணில மூழ்க வச்சி ஒரு காட்சியை இரண்டு நாளைக்கு எடுத்தாங்களாம்.
ஆனால், அவங்க ஒரு முறை கூட தனக்கு அசெகளரியமா இருக்கு, ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொல்லாம, எந்த சிரமத்தையும் முகத்துல காட்டாம அட்டகாசமா நடிச்சி யூனிட்ல எல்லோரட பாராட்டையும் வாங்கனாங்களாம்.
இந்த விஷயத்தை டைரக்டர் சத்யாமூர்த்தி .ச. சத்தியம் பண்ணாத குறையா பாராட்டிச் சொல்றாரு. ஹீரோயின் பத்தி மட்டுமே சொல்றீங்களே, மத்தவங்கள பத்தி சொல்லுங்கன்னு சொன்னால், ஹீரோயின் பத்தி சொன்னாதானே நீங்கள்லாம் நியூஸ் போடுவீங்கன்னு நம்மையே திருப்பிக் கேக்கறாரு…
அதெல்லாம் பொய் , போட்டோவ பாருங்க…எல்லோரும் இருக்கிற போட்டோவதான் போட்டிருக்கோம்னு நம்ம கடமையுணர்ச்சிய டைரக்டருக்கு காட்டியாச்சி…