என் அழகின் ரகசியம் – ஹன்சிகா

hansika_00001தமிழ்த் திரையுலகில் இப்போதைய முன்னணி ஹீரோயின் ஹன்சிகா மட்டுமே.

ஒரு படமா இரண்டு படமா ஏழு படங்களில் ‘தீயாக’ நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பதால் இளைத்தும் காணப்படுகிறார்.  இவ்வளவு பிஸியிலயும் அவங்களப் பத்தின சில ரகசியங்களையும் விஷயங்களையும் நமக்காக சொன்னாங்க.

“ என் அழகைப் பத்தி பேசிப் பெருமைப்பட்டுக்க, எனக்கு விருப்பமேயில்லை. எனக்குப் பொருத்தமான டிரஸ்தான் என்னை அழகா காட்டுதுன்னு நினைக்கிறேன். மனசை சுத்தமா வச்சிக்கிறேன், அதான் முகத்துல இன்னும் அழகை கூட்டுதுன்னு நினைக்கிறேன்.

ஹிந்திப் படங்கள்லயும் நடிக்க வாய்ப்பு வருது. ஆனால், இங்க ரொம்ப பிஸியா இருக்கிறதால , அங்க நடிக்க நேரமேயில்லை.

எல்லாரும் என்னை எப்படி  இப்படி இளைச்சன்னு கேக்கறாங்க. ஓடியாடி நடிச்சிட்டு இருக்கன், சாப்பாட்டையும் கொஞ்சம் குறைச்சிட்டேன், அதோட எந்த வேலை இருந்தாலும் தினமும் எக்சர்சைஸ் பண்றன். அதான், இப்படி மாறிட்டேன்.

ஏழை, எளிய குழந்தைகளை தத்தெடுத்து அவங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யறதுக்கு காரணம் எங்க அம்மாதான். எங்க அம்மா இதை மாதிரி ஏற்கெனவே உதவிகள் செஞ்சிட்டு வர்றாங்க.

அவங்கதான், ஒரு நாள் , நீயும் இதை ஏன் செய்யக் கூடாதுன்னு கேட்டாங்க. அந்த கேள்வி என்னை யோசிக்க வச்சது. அதுக்கப்புறம்தான் நானும் இதை செய்ய ஆரம்பிச்சேன். இது எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கு, ” என்றார்.

ஹன்சிகா , நீங்க அழகால மட்டும் மனசுல இடம் பிடிக்கலை, நீங்க செய்யற இந்த சேவையாலயும் பெரிய இடத்தைப் பிடிச்சிடுவீங்க…

 

Read Previous

‘அழகன்’ பவர் ஸ்டார் பாடல் – இயக்குனர் விளக்கம்

Read Next

நார்வே குறும்பட விழா – ‘இடுக்கண்’ சிறந்த படமாக தேர்வு