ஆதியும் அந்தமும்…

athiyum anthamum_00014என்கே கிராப்ட் பி. லிட் , ஆர்எஸ்ஆர் தயாரிக்க கெளஷிக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘ஆதியும் அந்தமும்’.

ஒரு வட்டத்தில் ஆதியும், அந்தமும் ஒன்றுதான். ஆரம்பித்ததில்தான் முடியும், முடிவில்தான் ஆரம்பிக்கும். இப்படி ஒரு வித்தியசாமான பின்னணியில் நடக்கும் கதைதான் இந்த படம்.

முதல் படத்தில் பொதுவாக எளிமையான கதைகளேயே இயக்குனர்கள் தேர்ந்தெடுத்து இயக்குவார்கள். ஆனால், இந்த படத்தில் கெளஷிக் , மனோதத்துவ அடிப்படையில் நடக்கும் குற்றப் பின்னணியை கதையாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட கதையை படமாக எடுக்க சம்மதித்த தயாரிப்பாளர்களின் துணிச்சல், தன்னை விட பெரிது என்கிறார் இயக்குனர்.

அஜய், மிட்டலி அகர்வால், கவிதா ஸ்ரீனிவாசன், ராமநாதன், யுவான் சுவாங் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி.கணேசன் இசையமைக்கிறார். நா. முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார்.

ஒளிப்பதிவு – டி.எஸ். வாசன், படத்தொகுப்பு – ரமேஷ் பாரதி, கலை – அமரன் .

ஊட்டி, ஹைதராபாத், பாண்டிச்சேரி, சென்னை என படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read Previous

பரதேசி – விமர்சனம்

Read Next

தங்க மீன்கள் – டிரைலர் வெளியீடு