‘கேளடி கண்மணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அஜித் நடித்த ‘ஆசை’ , சூர்யா அறிமுகமான ‘நேருக்கு நேர்’ , உட்பட பல படங்களை இயக்கியவர் வஸந்த்.
இவர் இயக்கி, விரைவில் வெளிவர உள்ள ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் இவரின் மகன் ‘ரித்விக் வருண்’ஐ நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற அறிமுக விழாவில் இயக்குனர் வஸந்தின் குருவான இயக்குனர் கே. பாலசந்தர் , ரித்விக் வருணை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, சேரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நடனம் ஆடுவதில் சிறப்பு வாய்ந்தவரான ரித்விக் நடிப்பிலும் சிறந்த பெயரைப் பெற்று அப்பாவின் புகழையும் மீறி வளரவேண்டும் என அவர்கள் வாழ்த்தினார்கள்.