மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சி – பாலாஜி சக்திவேல்

vazhakku en press meet_00012

60வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவற்றில் தமிழ்த் திரையுலகிற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.அவை,

சிறந்த பிராந்திய மொழி தமிழ்த் திரைப்படம் – வழக்கு எண்  18/9

சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ராஜா (வழக்கு எண்  18/9)

சிறந்த நடனக் கலைஞர் – பிர்ஜு மகாராஜ் (விஸ்வரூபம்)

சிறந்த கலை இயக்குனர் – இளையராஜா (விஸ்வரூபம்)

சிறந்த உடை வடிவமைப்பாளர் – பூர்ணிமா ராமசாமி (பரதேசி)

விருதுகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் ‘வழக்கு எண்  18/9’ படக் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்களுடைய மகிழ்ச்சியை பகிரிந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘வழக்கு எண்  18/9’ படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசும் போது, “மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சியான தருணம் இது. இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் கதையே சொல்லவில்லை. நீங்க என்ன வேணா எடுங்கன்னு சொல்லி ரொம்ப சுதந்திரம் கொடுத்தாங்க. அதன் காரணமாதான் இந்த விருது இப்ப கிடைச்சிருக்கு.

நான் வாங்கிய சிறந்த பிராந்திய மொழிப் பட விருதை விட படத்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜா தேசிய விருது வாங்கியது மிகவும் உயர்ந்தது. ரொம்ப சந்தோஷப்படறேன்.

சினிமாங்கறது ஒரு கூட்டு முயற்சி. இதனால் விளைந்த பயன்தான் இந்த படம். இந்த விருது மேலும் இது போன்ற சமூக சிந்தனை உள்ள படங்களை எடுக்க உதவும், ” என்றார்.

தேசிய விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் ராஜா பேசும் போது, “இந்த விருது கிடைச்சது எனக்கு ஆச்சரியமா இருக்கு. என்னை விட பெரிய ஆளுங்களாம் இருக்கும் போது எனக்கு விருது கொடுத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு, ” என்றார்.

‘வழக்கு எண் 18/9’ படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் லிங்குசாமி பேசும் போது, “போன் பண்ணி பாராட்டறவங்கள்லாம் இன்னும் நிறைய விருது கிடைக்கும்னு எதிர்பார்தோம்னு சொன்னாங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

இந்த விருது கிடைக்கும்னு ஏற்கெனவே நினைச்சோம். பிரான்ஸ் படவிழா, சென்னை பட விழாக்கள்ல இந்த படம் விருது வாங்கிச்சி. இப்ப தேசிய விருது கிடைச்சிருக்கு.

முதல் முறையா எனக்கு நல்ல சினிமான்னா என்ன அப்படிங்கறதை கத்துக் கொடுத்ததே  இயக்குனர் பாலாஜி சக்திவேல்தான். என்னோட முக்கிய நண்பர் இந்த விருதை வாங்கிக் கொடுத்தது ரொம்ப பெருமையா இருக்கு, ” என்றார்.

தேசிய விருது வென்ற கலைஞர்கள் அனைவருக்கும் screen4screen.comன் வாழ்த்துகள்.

 

Read Previous

நடிகரான இயக்குனர் வஸந்த் மகன்…

Read Next

ஈழத் தமிழர் பிரச்சனை – தமிழ்த் திரையுலக உண்ணாவிரதம்