ரெண்டாவது படத்தில் வெங்கட் பிரபு…

redavathu-padam-venkat-prabu‘தமிழ்ப் படம்’ இயக்கிய சி.எஸ். அமுதன் அடுத்து இயக்கி வரும் படம் ‘ரெண்டாவது படம்’.

விமல், அரவிந்த், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கண்ணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. படத்தில் 80களில் ஹிட்டான பாடல்களைப் போல் இந்த படத்திலும் ஒரு பாடலை வைத்திருக்கிறார்கள்.

மதன் கார்க்கி எழுதி எஸ்.பி. பாலசுப்ரமணியம் – சித்ரா பாடியுள்ள ‘ரோசாப் பூ ஒன்று..ராசா கை சேர…’ என்ற அந்த பாடலில் பிரபலமான ஒருவரை நடிக்க வைக்கப் போவதாக இசை வெளியிட்டின் போது படத்தின் இயக்குனர் சி.எஸ். அமுதன் சொல்லியிருந்தார்.

அந்த பிரபலம் யார் என்று இப்போது அவரே தெரிவித்துள்ளார். ‘சென்னை 28 ’, ‘கோவா’ ’‘மங்காத்தா’ படங்களின் இயக்குனரும், நடிகருமான வெங்கட்பிரபு இந்த பாடலில் இனியாவுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

முதலில் இந்த பாடலுக்கு நிறையவே விமர்சனம் எழுந்தாலும் போகப் போக அனைவரும் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வெங்கட் பிரபுவை இந்த பாடலில் நடிக்க வைத்திருப்பதன் மூலம் இன்னும் அதிகமாகவே பேச வைத்துவிடுவார்கள்.

Read Previous

சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

Read Next

விஜய், அஜித் என் இரு கண்கள் மாதிரி… – இயக்குனர் எழில்