ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆஸ்கர் பிலிம்ஸ் மீண்டும் படத் தயாரிப்பில் பரபரப்பாக இறங்கியுள்ளது.
தற்போது ‘ஐ, வல்லினம், பூலோகம், மரியான், ’ போன்ற படங்களைத் தயாரித்து வருகிறது. இந்த படங்களுக்கு அடுத்து தயாரிக்க உள்ள படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’.
இயக்குனர், நடிகர் நாசரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த அனீஸ் இந்த படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜெய், நஸ்ரியா நஜீம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இன்னொரு புதுமுக நாயகியும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவரும் நடிக்க இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
இந்த படம் குறித்து ஜெய் கூறுகையில், “எங்கேயும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு கதைகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து வருகிறேன். இந்த படம் எனது திரையுலக முன்னேற்றத்தில் ஒரு முக்கிய படமாக அமையும்,” என்றார்.
ஜிப்ரான் இசையில் மதன் கார்க்கி , பார்வதி, தேன்மொழி தாஸ், கார்த்திக் நேதா, காதல்மதி பாடல்களை எழுதுகிறார்கள். மதன் கார்க்கி இயக்குனர் அனீஸ் உடன் இணைந்து படத்தின் வசனத்தையும் எழுதுகிறார்.
தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தான் கேட்ட கதைகளில் இந்த படத்தின் கதையும் மிகச் சிறந்த ஒன்று என்று கூறுகிறார்.