‘துள்ளி விளையாடு’ – 29ம் தேதி ரிலீஸ்…

thulli-vilaiyaduவின்சென்ட் செல்வா இயக்க ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் ,தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்ராயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு.

சான்றிதழ் பெறுவதற்காக படத்தை சென்சார் குழுவினருக்கு போட்டுக் காட்டினர் தயாரிப்பாளர்கள்.

படம் பார்த்த சென்சார் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல் ‘ யு ’ சான்று அளித்தனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறுகையில், “அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் காதல், ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான காட்சிகள் கொண்ட படமாக ‘துள்ளி விளையாடு’ வந்துள்ளது. இந்தப் படம் சென்சார் குழுவுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. எந்த வெட்டும் தரவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் முழுமையான திருப்தி அளிக்கும் ,” என்றார்.

இம்மாதம் 29ம் தேதி இப்படம் வெளியாகிறது.

Read Previous

ஜெய் நடிக்கும் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’

Read Next

இன்றைய ரிலீஸ்…