‘கடல்’ கௌதம் நடிக்கும் அடுத்த படம்…

gowtham‘கடல்’ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் அடுத்து ‘அலா மொதலைன்தி’ என்ற தெலுங்கிலிருந்து தமிழிற்கு ரீமேக்காகும் படத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார்.

‘நான் ஈ’ படத்தின் நாயகன் நானி தெலுங்கில் நாயகனாக நடித்த சூப்பர் ஹிட் படம்தான் ‘அலா மொதலைன்தி’. ஆந்திர அரசின் விருதான நந்தி விருதையும் பெற்ற படம் இது.

பிரபல இயக்குனரான பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த ரவி தியாகராஜன் இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சினிமா உலகில் புதிய பரிமாணத்தையும், சினிமாவின் தரம் உயர 30 வருடங்களாக முக்கிய காரணமாக விளங்கி வரும் பி. செங்கையாவின் ரவி பிரசாத் யூனிட் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த நிறுவனம் புதுப் புது கருவிகளை   திரையுலகிற்கு வழங்கி வரும் நிறுவனமாகும். பிரின்ட், பிராசசிங், டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

படத்தின் நாயகி மற்றும் மற்ற நட்சத்திரத் தேர்வும் நடைபெற்று வருகிறது.

டி.இமான் இசையமைக்கிறார். அனைவரையும் கவரும் சிறந்த காதல் படைப்பாக இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது.

ஹைதராபாத், மைசூர் மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.

பி.  ரவிக்குமார், பி.வி. பிரசாத் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Read Previous

‘என்னமோ நடக்குது’ கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்…

Read Next

இன்றைய ரிலீஸ்…