இன்று 29 மார்ச் 2013 , வெளியாகும் படங்கள்…
சென்னையில் ஒரு நாள்
ஐ பிக்சர்ஸ், மேஜிம் பிரேம்ஸ் தயாரிப்பில் ஷகித் காதர் இயக்கியிருக்கும் படம். சரத்குமார், சேரன், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, ‘பூ’ பார்வதி, மல்லிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா
பசங்க புரொடக்ஷன்ஸ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம். இசை – யுவன்ஷங்கர் ராஜா. விமல், சிவ கார்த்திகேயன், ரெஜினா, பிந்து மாதவி, சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கீரிப்புள்ள
ஏஞ்சல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பெரோஸ் கான் இயக்கியிருக்கும் படம். இசை – ஜெப்ரிக். யுவன், திஷா பான்டே, சரவணன், தம்பி ராமய்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அழகன் அழகி
ஶ்ரீ அண்ணாமலையால் கிரியேஷன்ஸ் வழங்க, சன் மூன் பிக்சர்ஸ், கிரீன் 2 சினிமா தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் படம். இசை – கண்ணன். ஜாக், ஆருணி, சாம்ஸ், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



