ஸோ…பிஸி…அப்பா படத்தில் நடிக்காத ஸ்ருதி…

shruthi-hassanஸ்ருதிஹாசன் தெலுங்கில் நடித்த ‘கப்பார் சிங்’ மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களின் வரிசையில் இடம் பெற்று விட்டார்.

அது மட்டுமல்ல, பிரபுதேவா இயக்கத்தில் ‘ராமையா ஒஸ்தாவையா’ , ‘டி- டே’ ஹிந்திப்படங்களிலும் நடித்து முடித்து விட்டார்.

தெலுங்கில் மட்டும் தற்போது நான்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்து இயக்கும் ‘Bitter Chocolate’ என்ற படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் மறுத்து விட்டார் .

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “ இப்ப நான் ரொம்ப பிஸியா இருக்கேன். ஆறு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறேன். என் அப்பா இயக்கத்துல ‘பிட்டர் சாக்லேட்’ படத்துல நான் நடிக்கலை. ஒரு பக்கம் மகிழ்ச்சியாவும், இன்னொரு பக்கம் கஷ்டமாவும் இருக்கு, ஏன்னா இப்ப என் கிட்ட தேதியே இல்லை, ” என தெரிவித்துள்ளார்.

Read Previous

தெலுங்கில் ‘கிரேஸி’ ஆக மாறும் ‘சேட்டை’

Read Next

கோடிகளை அள்ளும் ‘கேடி & கில்லாடி’