தெலுங்கில் ‘கிரேஸி’ ஆக மாறும் ‘சேட்டை’

settai_00026தமிழில் தயாராகும் பல படங்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுவது வாடிக்கையாகி விட்ட ஒன்று.

அந்த வரிசையில் தற்போது தமிழிலிருந்து தெலுங்கிற்கு மாற்றமாகும் ‘சேட்டை’ படத்திற்கு தெலுங்கில் ‘கிரேஸி’ என பெயர் வைத்திருக்கிறார்கள். முதலில் ‘நாட்டி பாய்ஸ்’ என வைக்கப்பட்ட பெயரை தற்போது மாற்றி விட்டார்கள்.

இன்று ‘கிரேஸி’ படத்தின் இசை வெளியீடு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

ஹன்சிகாவும், அஞ்சலியும் தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களாக உள்ளனர். தெலுங்கில் பரிச்சயமான நாசர், தெலுங்கு நகைச்சுவை நடிகரான  ‘ஆலி ’ யும் சேட்டை படத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் நாளை வெளியாகும் ‘சேட்டை’ திரைப்படம், தெலுங்கில் இம்மாத கடைசியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

‘முள்ளும் மலரும்’ பார்த்து அடிக்க வந்தார்கள் – இயக்குனர் மகேந்திரன்

Read Next

ஸோ…பிஸி…அப்பா படத்தில் நடிக்காத ஸ்ருதி…