கோடிகளை அள்ளும் ‘கேடி & கில்லாடி’

kbkr new_00023பாண்டிராஜ் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், விமல், ரெஜினா, பிந்து மாதவி நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ கடந்த வெள்ளியன்று வெளியானது.

வெளியான சில நாட்களிலேயே கோடிகளை வசூலித்துள்ளது. வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 10 கோடிக்கும் மேலாக வசூல் ஆகியுள்ளது. திங்களன்றும் , ஞாயிற்றுக் கிழமை போன்றே வசூல் தொடர்ந்துள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ், படத்தை இணைந்து தயாரித்துள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன், வெளியிட்டுள்ள ஸ்டுடியோ க்ரீன் , படக் குழுவினர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாண்டிராஜ் ‘ஹாட்ரிக்’ வெற்றியைக் கொடுத்துள்ளதால் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர் பாண்டிராஜை வைத்து படம் தயாரிக்க முயல்வதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Read Previous

ஸோ…பிஸி…அப்பா படத்தில் நடிக்காத ஸ்ருதி…

Read Next

அஜித் புதிய படம் இன்று ஆரம்பம்…