சுந்தர் .சி இயக்கத்தில் சத்யா இசையமைப்பில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு.’
இப்படத்தின் பாடல் காட்சிகள் ஜப்பான் நாட்டில் படமாக்கப்படுகின்றன. இதற்காக இப்படத்தின் காதல் ஜோடிகளான சித்தார்த், ஹன்சிகா மற்றும் படக் குழுவினர் ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்கள்.
ஜப்பான் நாட்டில், ‘டோயாமா’ என்ற இடத்தில் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.
இப்படம் தெலுங்கில் ‘சம்திங் சம்திங்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. தமிழில் சந்தானம் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் நடிக்கிறார்.
அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.