‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கிய சரவணன் அடுத்து இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிப்பது தெரிந்ததே.
இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
லட்சுமி மேனன் தற்போது சசிகுமார் ஜோடியாக ‘ குட்டிப் புலி’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.
அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், விமல் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவற்றோடு இப்போது கௌதம் ஜோடியாகவும் நடிக்கவிருக்கிறார்.
சமீபத்தில்தான் லட்சுமி மேனன் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள விடுமுறையைப் பயன்படுத்தி புதிய படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
ம்ம்ம்…‘பணம்’ வந்தால் படிப்பை விடாமல் இருந்தால் சரி…..