புதுமுக நட்சத்திரங்கள், புதுமுக தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து தன் முதல் திரைப்படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் K.S.தங்கசாமி.
சென்ற வருடம் வெளியான சிறு பட்ஜெட் படங்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களால் பாராட்டப்பட்ட படம் ‘ராட்டினம்.’
சிறு பட்ஜெட் படங்களை பெரிய நிறுவனங்கள் வாங்க ‘ராட்டினம்’ படம் முதல் படியாய் இருந்தது.
‘எட்டுத்திக்கும் மதயானை’ திரைப்படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்து ராட்டினம் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து இயக்குகிறார் K.S.தங்கசாமி.
விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.