அஞ்சலி – சில தகவல்கள்…

anjali‘கற்றது தமிழ்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே யார் இவர் ? நம் பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கிறாரே என பல தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடித்தவர்.

தொடர்ந்து ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

அஞ்சலி பற்றிய சில விவரங்கள்…

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரசோல் என்ற ஊரைச் சேர்ந்தவர் அஞ்சலி.

பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும், தமிழ் நாட்டுக்கு வந்து விட்டார்.

ஆரம்பத்தில் சில குறும் படங்களிலும், விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார்.

சிவ நாகேஸ்வர ராவ் என்ற இயக்குனரால் ‘போட்டோ’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2006ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் நாயகியாக அறிமுகமான ‘கற்றது தமிழ்’ படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

ஏறக்குறைய 25 படங்களில் நடித்து விட்டார் அஞ்சலி.

தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

அவருடைய பெற்றோரையும், குடும்பத்தையும் விட்டு எப்போதோ பிரிந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

அஞ்சலி, மீண்டும் வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

 

.

Read Previous

‘எட்டுத்திக்கும் மதயானை’ புதிய படம்…

Read Next

டிரைலர் பார்த்து விசில் அடிச்சாங்க…- ராஜகுமாரன்