‘மச்சான்’ னு டைட்டில் பார்த்த உடனே குடும்பக் கதைன்னு நினைச்சிட வேணாம்.
இது நாம நம்ம நெருங்கிய நண்பர்களை கூப்பிடுவோமே அந்த ‘மச்சான்’. அதுக்காகத்தான் ‘மச்சான்’ னு டைட்டில் வச்சிருக்கன்னு சொல்றாரு இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
கருணாஸ், விவேக், ஷெரில் பின்டோ, கோவை சரளா, முக்கிய வேடத்தில் ரமேஷ் அரவிந்த், இவர்களுடன் இயக்குனர் ஷக்தி சிதம்பரமும் இந்த படத்துல நடிக்கிறாரு.
“நண்பர்களுக்குள்ள நடக்கிற கதைதான் இந்த படம். இன்னைக்கி நாடெங்கும் நடந்துட்டிருக்கிற பிரச்சனையை இதுல கையாண்டிருக்கேன். கல்யாணம் ஆன பிறகு நம்ம நண்பர்களை வீட்டுக்குள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது நமக்குள்ளே வர்ற ஒரு பெரிய பிரச்சனை.
அதுல நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். என் படத்துல நட்பையும், காதலையும், அழகா காமெடி கலந்து கொடுத்திருக்கேன். தியேட்டர்ல கண்டிப்பா விசில் பறக்க வைக்கும் காமெடி சீன்ஸ் நிறைய இருக்கு. என்னோட வழக்கமான ஸ்டைல்ல இந்த படத்தை பண்ணியிருக்கேன்.
இந்த படத்துல மூணு பாடல்கள் நான் எழுதியிருக்கேன். ஒரு பாட்டுக்கு 18 நடிகர்கள் நடிச்சிருக்காங்க. விஜய் சேதுபதி, விமல், பார்த்திபன், பரத், ஸ்ரீகாந்த், சிவா, எஸ்.ஜே. சூர்யா…இப்படி நிறைய பேர் எனக்காக நடிச்சி கொடுத்திருக்காங்க.
படத்தைப் பார்த்ததும் பிலிம்ஸ் உடனே மொத்தமா வாங்கிட்டாங்க. சீக்கிரமே படத்தை ரிலீஸ் பண்றோம்,” என்றார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.