மனதில் மாயம் செய்தாய்…

manathil maayam seithai pooja_00001‘மைனா’ படம் பலருக்கும் நல்ல வாழ்க்கையையும், திருப்புமுனையையும் ஏற்படுத்திக் கொடுத்த படம்.

அந்த படத்தை இயக்கிய பிரபு சாலமன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படமான ‘கும்கி’யை கொடுத்து முன்னணி இயக்குனர்கள்ல ஒருத்தரா இடம் பிடிச்சிட்டாரு.

விதார்த் தொடர்ந்து பல படங்கள்ல ஹீரோவா நடிச்சிட்டு வர்றாரு, தம்பி ராமைய்யா பல படங்கள்ல குணச்சித்திர கேரக்டர்லயும், காமெடி கேரக்டர்லயும் நடிச்சிட்டு வர்றாரு.

அமலாபால் , விஜய்க்கு ஜோடியா நடிக்கிற அளவுக்கு போயிட்டாங்க. தெலுங்குல முன்னணி ஹீரோயினாவும் ஆகிட்டாங்க.

ஆனால், அந்த படத்துல காதல் ஜோடிகளான விதார்த் – அமலா பாலை கூடவே கூட்டிக்கிட்டு காடு, மலைலாம் திரிஞ்ச அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரை யாரும் மறந்திருக்க மாட்டாங்க. அவர் பேரு சேது. இப்ப ‘மைனா’ புகழ் சேது.

அவர் இப்ப இரண்டு ஹீரோக்கள்ல ஒருத்தரா நடிக்கிற படம் ‘மனதில் மாயம் செய்தாய்’, இன்னைக்கு காலையில ஏவிஎம் ஸ்டுடியோல பூஜை நடந்தது. இன்னொரு ஹீரோவா பிரின்ஸ் நடிக்கிறாரு. ‘தமிழ் படம்’ ஹீரோயின் திஷா பான்டே, ரிச்சா பனாய் கதாநாயகிகளா நடிக்கிறாங்க. மணிகாந்த் கத்ரி படத்துக்கு இசையமைக்கிறாரு. சுரேஷ் குமார் டைரக்ட் பண்றாரு. ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறாங்க.

‘மைனா’ இயக்குனர் பிரபு சாலமன், ‘சாட்டை’ இயக்குனர் அன்பழகன் வந்து வாழ்த்தினவங்கள்ல முக்கியமானவங்க…

Read Previous

‘கொத்தனாராக’ வேலை பார்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்

Read Next

சூது கவ்வும் – விமர்சனம்