‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் வெற்றியைத் தொடரந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறது.
விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்த படத்தை இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கப் போகிறார்கள். நாயகன், நாயகி, மற்ற நட்சத்திரத் தேர்வு ஆரம்பமாகி விட்டது.
‘இதுவரை யாரும் சொல்லாத அழகிய காதல் கதை’ யாக அதாவது “A Beautiful Love Story Ever Told in Tamil Cinema” என்ற விதத்தில் இந்த படம் தயாராகப் போகிறது.
விரைவில் மற்ற விவரங்கள்…