கோயில், குளம் சுற்றும் சிம்பு…

simbu‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்று இருந்த நிலை போகப் போக மாறி விடும் போல இருக்கிறது. ஆம்…சிம்பு இப்போது ஆன்மீகத்தில் அதிகமாக பற்று கொண்டு விட்டாராம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு திரையுலகைப் பொறுத்தவரை எதையுமே சீக்கிரமாகவே பார்த்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய திரையுலக வாழ்க்கையில் அனைத்துமே மற்றவர்களுடன் ஒப்பிடும் போது சீக்கிரமாகவே நடந்திருக்கிறது. ஹீரோவானது, இயக்குனரானது என சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது, 30 வயதிற்குள்ளாகவே ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டு அதிலும் முந்தி விட்டார். சமீப காலமாகவே தியானம், யோகா ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்ட சிம்பு, ‘இங்க என்னா சொல்லுது’ படப்பிடிப்பிற்கு இடையே ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

இதைப் பற்றி சிம்பு கூறுகையில், “ ஆம் , நான் இப்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன் , இந்த த்யானம் மற்றும் ஆன்மிகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும். ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல , ஞானம் தேடுதல் தான் . நான் அந்த தேடுதலில் ஈடுப்பட்டு வருகிறேன் .இந்த தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலும்  மெருகேற்ற உதவும் என நம்புகிறேன் ‘என முற்றும் துறந்த முனிவர் போன்றே பேசுகிறார்.

Read Previous

24ம் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’ ஒரு பாடல் ரிலீஸ்…

Read Next

வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’