வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’

AE_4ft X 6ft_TAMIL.inddரு சில படங்கள் எப்போது வெளிவரும் என எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்போம் . அப்படி பட்ட ஒரு படம்  தான் “ஆப்டர் எர்த் “.  இப்படம் தமிழில் ‘அபாய கிரகம்’ என்கிற பெயரில் வெளி வருகிறது .

வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித் இருவரும் இப்படத்தில் தந்தையும் மகனாக   நடிக்கிறர்கள். கொலம்பியா  பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை  இந்திய வம்சா வழியை சேர்ந்த மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கி இருக்கிறார்.

இராணுவ  கமாண்டோ ஆபீசராக இருக்கும் வில் ஸ்மித்திடம் அவருடைய  மகன் ஜேடன் ஸ்மித் , ஜுனியர் ரேஞ்சராக பயிற்சி பெறுகிறார். ஒரு பயிற்சி விஷயமாக வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித் உள்ளிட்ட குழு பயணிக்கும் ‘ஏர் கிராப்ட்’ விண்வெளியில் விபத்துக்குள்ளாகி , வேறொரு  கிரகத்திற்குள் சென்று விழுந்து விடுகிறது . அதில் இருந்தவர்களில் அப்பாவும் மகனும் மட்டுமே உயிர் பிழைக்கிறார்கள் .

மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற அந்த பயங்கரமான கிரகத்தில்  விலங்குகள் வடிவத்திலும் ,இ யற்கையின் வடிவத்திலும் பல ஆபத்துகள் மனிதனக்கு எதிராக பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கின்றன .  அப்படிப்பட்ட அந்த கிரகத்தில் இருந்து  வில் ஸ்மித்தும் ,ஜேடன் ஸ்மித்தும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை மிகவும் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன் .

 ஜூன் 7ம் தேதி ,  இந்தியாவில் நான்கு மொழிகளில் இப்படத்தை  சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

Read Previous

கோயில், குளம் சுற்றும் சிம்பு…

Read Next

ஐபிஎல்: இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

Most Popular